2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் சுஹதாக்கள் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் சுஹதாக்கள் தினத்தையொட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (12)  மாலை சுஹதாக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

12.8.1990 அன்று 121 முஸ்லிம்;கள் படுகொலை செய்யப்பட்டு 24ஆவது  ஆண்டு நிறைவையொட்டி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின்; ஏற்பாட்டில் இந்த சுஹதாக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, குர்ஆன் ஓதப்பட்டது. மௌலவி ஐ.எம்.றியாஸ் தலைமையில் அல் குர்ஆன் பாராயணம் மற்றும் மௌலவி ஏ.டபிள்யூ.எம்.ஹாரிஸ் தலைமையில் விசேட பிரார்த்தனை நடைபெற்றன.

ஆதன் தலைவர் ஏ.சி.எம்.சயீது தலைமையில் நூறுஸ்ஸலாம் (பொதுமையவாடி) பள்ளிவாசலில் நடைபெற்ற சுஹதாக்கள் நினைவுதின நிகழ்வில் அமைச்சர் பசீர்; சேகுதாவூத், கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிழ் நஸீர் அஹமட், பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X