2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேலைத்திட்டங்கள் பற்றிய மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகரசபையுடன்  கொய்கா   மற்றும்  ஆசிய பவுண்டேஷனும் இணைந்து செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பற்றிய மீளாய்வுக் கூட்டம் இன்று புதன்கிழமை (13) மாநகரசபையில் நடைபெற்றது.

நகரில் சுற்றுலாத்தகவல் நிலையம், ஆற்றங்கரை ஓரமாக கச்சேரி உள்ள கோட்டைப் பகுதிக்குச் செல்வதற்கான நடைபாதை அமைத்தல், மட்டக்களப்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய கடைத்தொகுதி அமைப்பதற்குரிய திட்டவரைவுப்படம் அமைத்தல், இலத்திரனியல் விளம்பரப்பலகை அமைத்தல் போன்றவற்றுக்காக  3.51 மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல்; 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்வரை செய்யப்பட்ட வேலைத்திட்டங்களின் மீளாய்வு விடயங்கள் பல் ஊடகத் திரையில் இதன்போது காண்பிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின்  அடிப்படையில்  இலத்திரனியல் விளம்பரப் பலகை அமைத்தல் வேலைத்திட்டம் பூர்த்தியடைந்துள்ளது.  மற்றைய வேலைகள் செயற்றிட்டத்தில் உள்ளதாகவும்  மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவம், பூகோளத் தகவல் முறைமை பற்றிய வேலைத்திட்டங்ளை செய்வதற்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொய்க்காவைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாக நிபுணர் பேராசிரியர் ஹியோ மயூங் சூண், திண்மக்கழிவு முகாமைத்துவ நிபுணர் பேராசிரியர் லீ டொங் ஹூண், நகர திட்டமிடல் நிபுணர் ஜோ சூண் மேன், மாநகர பொறியியலாளர் பி.அச்சுதன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், கணக்காளர் ஜோண்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X