2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளின் அபிவிருத்திக்காக தொகை மதிப்பீட்டை சமர்பிக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் ஐந்தாண்டுத் திட்டத்திற்கமைவாக தொகை மதிப்பீட்டைச் சமர்ப்பிக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க சகல பாடசாலை அதிபர்களையும் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளரினால் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 4 தசாப்தங்களுக்கு மேலாக கல்வி அமைச்சு பாடசாலைத் தொகை மதிப்பை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.
கல்வி அமைச்சினால் 2011-2016 மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு செயற்திட்டம் தற்பொழுது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கு அமைவாக 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் ஐந்தாண்டு செயற்திட்டத்தின் கீழ் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதியைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் இந்த பாடசாலைத் தொகை மதிப்பீடானது முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் சகல அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் தேவையை அறிந்து கொள்வதற்காகவும் இந்த பாடசாலைத்தொகை மதிப்பீடு பயன்படுத்தப்படவிருக்கின்றது.

அத்துடன் 2013 ஆண்டு முதல் உயர்தரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பவியல் பாடநெறியை செயற்படுத்துவதற்கு தெரிவு செய்யப்படவிருக்கும் பாடசாலைகளின் அவசியமான அடிப்படை வசதிகளைத் தெரிந்து கொள்வதற்கும் அதற்கான ஆசிரியர்களின் தேவையை அறிந்து கொள்வதற்கும் இத்தொகை மதிப்பின் தகவல்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

அத்தியாவசியத் தேவையான கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை அறிவதற்கு உபயோகப்படும் காட்டிகளை தயாரிப்பதற்கும் இத்தொகை மதிப்பீடு அவசியமாகும்.

சர்வதேச ஒப்பீடுகளுக்காக பயன்படுத்தப்படும் இத்தரவுகள் மிகத் துல்லியமாக வழங்கப்படல் வேண்டும்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X