2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் புனரமைக்கப்படும் விளையாட்டு மைதான பணிகள் தீவிரம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரில் புனரமைக்கப்பட்டு வரும் வெபர் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள், விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் பணிப்புக்கமைய முடிவுறும் நிலைக்கு வந்துள்ளன.

மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது பாரிய சவாலாக இருப்பதனால், விளையாட்டுத் துறை அமைச்சர் ஒப்பந்தக்காரர்களிடம் வேலைகளை துரிதப்படுத்துமாறு பணித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் 175 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அரச பொறியியல் கூட்டத்தாபனத்தினால் அமைக்கப்பட்டு வரும் இந்த மைதானத்தில் 400 மீற்றர் ஓடு பாதை, உள்ளக அரங்கு, நீச்சல் தடாகம், பார்வையாளர் மண்டபம் என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X