2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் உதவி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாகரைப் பிரதேசத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர்த் தாங்கிகளும் குடிநீர் போத்தல்களும் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கொழும்பு ஸ்ரீபுத்த அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு  ஸ்ரீசம்போதி விகாரையின் விகாராதிபதி பூச்சிய சம்ம தரனாலகம குசலதம்மா ஹிமியின்  தலைமையில் வாகரை மகா வித்தியாலயத்தில் இவை வழங்கப்பட்டன.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பத்து கிராம சேவகர் பிரிவுகள் வரட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தின் உதவியுடன் கொழும்மில் இருந்து வந்த ஸ்ரீபுத்த அமைப்பினால் 118 நீர்தாங்கிகளும் அறுபத்தெட்டாயிரம் லீற்றர் குடிநீரும் வழங்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம சேவகர் பிரிவு தோறும் பகிர்ந்தளிக்கப்படும் என வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X