2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்கக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிராமங்கள் தோறும் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு நல்லிணக்கத்தை மேற்கொள்வது சம்மந்தமான நல்லிணக்கக்குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்தின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜயசிங்க கலந்துகொண்டார்.

மேலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், சிவில் பாதுகாப்பு குழுக்கள், சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள், மதத் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களத் தலைவர்கள் என பலரும் இந்தக் கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதன்போது, கிராமங்கள் தோறும் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அணுகி தீர்ப்பதற்கான ஆலேசனைகள் வழங்கப்பட்டன.

நிறைவேறாத வேலைத்திட்டங்கள், முடிக்கப்படவேண்டிய வேலைகள் சம்மந்தமாகவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் பொதுத் தேவைகள் சம்மந்தமாகவும் ரஜீவ விஜயசிங்க கேட்டறிந்து கொண்டார்.

அரச அதிகாரிகளினால் சேவைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சம்மந்தமாகவும் கலந்து கொண்டோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், கிராமங்கள் தோறும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகள் சம்மந்தமாகவும் விளக்கமளிக்கப்பட்டன.

இதன்போது இனங்கணப்பட்ட சில பிரச்சினைகளை ஜனதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து தீர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜயசிங்க  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X