2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

எருமை மாடுகளுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, ஆலங்குளம் பகுதியிலிருந்து   சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 26 எருமை மாடுகளை  மண்டூர் சங்கர்புரம் பகுதியில் கைப்பற்றியதுடன்,  சந்கேத்தின் பேரில் 3 பேரை கைதுசெய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து எருமை மாடுகளுடன் முறக்கொட்டாஞ்சேனை 37ஆம் கொலனி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர்களை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

இது இவ்வறிறுக்க, ஆலங்குளம் பகுதியில் ஊள்ள பண்ணையாளர் ஒருவருக்குச் சொந்தமான 26 எருமை மாடுகள் கடந்த 10ஆம் திகதி காணாமல் போயிருந்தது. இந்த  நிலையில், காணாமல் போன   எருமை மாடுகளை குறித்த பண்ணையாளர் தேடி வந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X