2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேடப்பட்ட சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர் துஷ;பிரயோகம் தொடர்பில் மட்டக்களப்பில் கடந்த மூன்று வருடங்களாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறையைச் சேர்ந்த  இந்தச் சந்தேக நபர் கடந்த மூன்று வருடங்களாக தேடப்பட்டுவந்த நிலையில்,  பல பகுதிகளிலும் தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இந்த நிலையில், சலூன் ஒன்றில் சிகை அலங்காரம் செய்துகொண்டிருந்தபோது  இவர் கைதுசெய்ய்யப்பட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் பெரேரா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இந்த சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்தச் சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு
தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X