2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முதியோருக்கு வினா-விடைப் போட்டி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு சமூக சேவை அமைச்சானது முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தினால் முதியோர் வினாவிடைப் போட்டியில் கோரளைப்பற்று பிரதேச முதியோர் சங்கம் முதலிடம் பெற்றது.

இரண்டாம் இடத்தை கோரளைப்பற்று மத்தியும் மூன்றாம் இடத்தை  மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவும் பெற்றன.

நேற்று வியாழக்கிழமை காலை மாவட்ட இந்து இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த முதியோர் சங்கங்களிலுள்ள முதியோர்கள் கலந்து கொண்டனர்.

சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரம், சமயம், சட்டம், கல்வி, விஞ்ஞானம், உள்நாட்டு, வெளிநாட்டு விடயங்களை உள்ளடக்கியதாக இப்போட்டி நடத்தப்பட்டது.

மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகதர்களான ஏ.மதுசூதனன், பி.விஸ்வகோகிலன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் நடுவர்களாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கே.ரவிச்சந்திரன், ஜீ.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் முதல் இடம் பெற்று வெற்றி பெற்ற சங்கத்தினர் இவ்வருடம் கொழும்பில் நடைபெறும் தேசிய முதியோர் தின விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X