2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

த.ம.வி.பு. உறுப்பினர் சு.க.வில் இணைவு

George   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ரி.எம்.வி.பி ) உறுப்பினரும், மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு (கொக்கட்டிச்சோலை) பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தம்பியப்பா பேரின்பராசா (ரகு) அக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி பொது மைதான புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற போது, பிரதம அதிதியாக கலந்து கொண்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி  முரளிதரனுக்கு மலர் மாலை அணிவித்த  தம்பியப்பா பேரின்பராசா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக அறிவித்தார்.

கடந்த 2008ஆம் அண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் (ரி.எம்.வி.பி) இணைந்து கெண்ட தம்பியப்பா பேரின்பராசா, அக்கட்சியின் சார்பில், படகு சின்னத்தில் மண்முனை மேற்கு (கொக்கட்டிச்சோலை) பிரதேசத்தில் கடந்த 2008.03.10 அன்று நடைபெற்ற பிரதேச சபைத்  தேர்தலில் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு 7000 இற்கும் அதிகமான வாக்குகளையும், 3000 இற்கும் அதிகமான விருப்பு வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றதுடன் பிரதேச சபையில் தவிசாளராக 5 வருடங்கள் பதவி வகித்தார்.

கடந்த  2013.03.10 அன்று பிரதேசசபை உள்ளுராட்சி அமைச்சினால் கலைக்கபட்டதை தொடர்ந்து  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ரி.எம்.வி.பி) மத்திய செயற்குழு உறுப்பினராகவும், மண்முனை மேற்கின் (கொக்கட்டிச்சோலை) பிரதேச அமைப்பாளராகவும் செயற்பட்டு வந்த நிலையில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X