2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புனித நிக்கலஸ் தேவாலயத்தின் பொன்விழா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தின்  ஐம்பதாவது ஆண்டு நிறைவையொட்டி பொன்விழா கூட்டுத்திருப்பலி ஞாயிற்றுக்கிழமை (17) ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (08) கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில், காலை ஆராதனை மற்றும் மறையுரைகளை குருமட அதிபர் அருட்தந்தை தேவதாசன்,  அருட்தந்தை ஓ.ஐ. ரஜீவன் நிகழ்த்தினர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாiறை மறைமாவட்ட ஆயர் பொன்னையா யோசப் ஆண்டகை தலைமையில் பங்குத் தந்தையர்களான அன்டனிராஜ், மகிமைதாசன், தன்னாமுனை சொமஸ்கன் நிறுவகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை இருதயராஜ் ஆகியோர் கூட்டத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.   



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X