2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வவுணதீவில் உபதபாலகம் திறக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரசேத்தில் உப தபாலகமொன்றை திறப்பதற்கான அனுமதியை தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன்குமாரதுங்க வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன்குமாரதுங்கவை சந்தித்து விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரசேத்தில் உப தபாலகமொன்றின் அவசியம் குறித்து அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புக்கள் தன்னிடம் சுட்டிக்காட்டியது.   இந்த நிலையில், வவுணதீவு பிரசேத்தில் உப தபாலகமொன்றை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன்குமாரதுங்கவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அமைச்சர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X