2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மயில் இறைச்சி, கட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் ஒருதொகை மயில் இறைச்சியையும் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கைதுசெய்ததாக  வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

திக்கோடை கிராமத்தைச்  சேர்ந்த இந்தச் சந்தேக  நபர் அருகில் உள்ள காட்டில் வேட்டையாடிக்கொண்டு வரும்போதே கைதுசெய்யப்பட்டார்.
இவரிடமிருந்து குறித்த கட்டுத்துப்பாக்கியையும்  மயில் இறைச்சியையும் கைப்பற்றியதாவும் பொலிஸார் கூறினர். 

அருகிவரும் உயிரினங்கள் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேக நபரை மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது 25,000  ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X