2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Super User   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடமாடும் சேவையொன்று இடம்பெறவுள்ளது.

 இதன்போது, மருத்துவம் (ஆயுர்வேதம்), பொலிஸ் முறைப்பாடுகள், தொழில் வழிகாட்டல்கள், இலவச சட்ட உதவிகள் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன்,  திருமணப்பதிவுகள் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சுமார் 70ற்க்கு மேற்பட்ட தம்பதிகளுக்கான திருமணப் பதிவுகளும், 24 மரணப்பதிவுகளும், 198 காலங்கடந்த பிறப்புப் பதிவுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X