2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி ஒன்றுகூடல் மற்றும் புனரமைப்பு கூட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சதன்


இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில், கட்சித்தலைவர் கி.சேயோன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைப்பெற்றது.

எதிர்வரும் மாதம் வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 15ஆவது மாநாட்டில், இளைஞர் அணி சார்பில் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காகவே இவ் ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் இளைஞர் அணி தொடர்பிலான பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், மா.நடராசா மற்றும் பட்டிருப்புத் தொகுதி தலைவர் எஸ்.விஜயரெட்ணம், செயலாளர் நா.துஸ்யந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கணகசபை மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆர்வளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்புத் தொகுதிக்கிளை புனரமைப்பு கூட்டம் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் சோமசுந்தரம் தலைமையில் சனிக்கிழமை (16) இடம்பெற்றது.

இதன்போது பட்டிருப்புத் தொகுதிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. நிர்வாகத் தெரிவு பட்டிருப்புத் தொகுதியிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மூன்றினையும் உள்ளடக்கியதாக பகிர்வு செய்யப்பட்டது. அத்துடன் நிர்வாக உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமங்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் அதன் தலைவராக சு.விஜயரெட்ணம், செயலாளராக நா.துஸ்யந்தன், பொருளாளராக ந.நடராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன். செல்வராசா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், மா.நடராசா, இலங்;கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் நாயகம் எஸ்.சிவகரன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ந.துஸ்யந்தன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி நிருவாக உறுப்பினர்கள் உட்பட ஏனைய இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X