2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இன நல்லிணக்க குழு அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால், காத்தான்குடியில் 'இன நல்லிணக்க குழு'வொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கீழ் செயற்படும் வகையில் இந்த இன நல்லிணக்க குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

இந்த இன நல்லிணக்க குழுவின் தலைவராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

15 பேரைக் கொண்ட இந்த நல்லிணக்க குழு, மட்டக்களப்பு மாவட்டத்திலும் காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களின் இன நல்லிணக்கத்தையும் இன ஐக்கியத்தையும் மேம்படுத்தும் வகையிலான பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X