2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புலமைப் பரிசில் தொகைகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து வேட்டை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மஹாபொல மற்றும் பேசரி புலமைப் பரிசில்களை 5 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டமொன்று, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீட வளாகத்திற்கு முன்னால் இன்று (19) மதியம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் இந்த கையொப்பம் சேகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது பலக்லைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கும் மகாபொல புலமைப்பரிசில் தொகை 2500 ரூபாவாகும். பேசரி புலமைப்பரிசில் தொகை 2000 ரூபாவாகும்.

இத்தொகை கடந்த ஒன்பது ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப புலமைப்பரிசில் தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமென தெளிவாக தெரிகின்றது. இதனால் கல்விக்கான பொருளாதார செலவுகளும் அதிகரித்துள்ளன என்று பல்கலைக்கழக மாணவர் பேரவை தெரிவித்தது.

மகாபொல மற்றும் பேசரி புலமைப் பரிசில்களை 5000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். அத்துடன், மகாபொல மற்றும் பேசரி புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் பல்கலைக்கழகம் வந்த முதல் மாதத்திலிருந்து கிடைப்பதில்லை. பெரும்பாலும் பல்கலைக்கழகம் வந்து 13 மாதங்கள் கடந்த பின்பே கொடுப்பனவுத்தொகை கிடைக்கும். இதனால் பலக்லைக்கழக மாணவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்யடிவர்களாக உள்ளனர் என்று அப்பேரவை சுட்டிக்காட்டியது.

மகாபொல மற்றும் பேசரி புலமைப்பரிசில் கொடுப்பனவுத் தொகையை முதல் மாதத்தின் குறித்த தினத்தில் இருந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்குவதற்கான பெற்றோரின் வருமான எல்லை பத்து வருடங்களாக மாற்றப்படவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான தகுதியுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் தொகை கிடைக்கவில்லை.

புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகையை பெற்றோரின் வருமான எல்லையை உயர்த்துவதுண்டு. மேலும் புலமைப் பரிசிலுக்கு தகுதியுடைய மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X