2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெண் பலி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தப் பெண் வீதியைக் கடந்து தனியார் பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்திற்குச் செல்ல முற்பட்டபோது, அவ்வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் - பெண் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.
 
வெல்லாவெளியைச் சேர்ந்த எஸ்.சந்திரகலா (வயது 42) என்பவரே கொல்லப்பட்டவராவார்.
 
படுகாயமடைந்த பெண்ணை உடனடியாக அருகிலிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் அவரைக் காப்பாற்ற முடியாமற் போயுள்ளது என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
 
இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரான பழுகாமத்தைச் சேர்ந்த சண்முகம் மோகன் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X