2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு உணவகங்களில் பரிசோதனை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சுகாதார அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து செவ்வாய்க்கிழமை (19) ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, மீறாவோடை போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், பேக்கரி, சில்லரைக்கடை போன்றவற்றை பரிசோதித்தனர்.

45 வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 15 கடைகளில் இருந்து பாவனைக்கதவாத பழ வகைகள், பேக்கரி பொருட்கள், உருளைக்கிழங்கு, முந்திரியம்பருப்பு, சொக்லேட், பராட்டா போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டு வியாபாரிகள் எச்சரிக்கப்பட்டதுடன் பொதுச்சுகாதார பரிசோதகர் முன்னிலையில் அழிக்கப்பட்டன என்று  ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி அச்சுதன் ஆகியோர் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X