2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்தில் நால்வர் படுகாயம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) மாலை இடம்பெற்ற வீதி விபத்;தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.நஸீர் தெரிவித்தார்.

மாலை 5.30 மணியளவில் களுதாவளை கலாசார மண்டபத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதியதன் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.

களுதாவளை கலாசார மண்டபத்தில் பொருட்களை இறக்கிட்டு திரும்பிய முச்சக்கர வண்டியுடன் வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

தேற்றாத்தீவினை சேர்ந்த எஸ்.சூரியகுமார் (31 வயது), தர்மலிங்கம் சிவனேசன்; (34 வயது) புவிராஜ் கனிவளன் (24 வயது), மகேந்திரன் பவித்திரன் (22 வயது) ஆகியோர் படுகாயமடைந்து, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சர் கே.சுகுணன் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பாண்டிருப்பினைச் சேர்ந்த புவிராஜ் கனிவளன் என்பவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் அவரை மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் வைத்தியசாலை அத்தியட்சர் மேலும் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி என்.ரி. நஸீர் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X