2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண திணைக்களத்துக்கு புதிய வாகனம் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கிழக்கு மாகாண விவசாய நடவடிக்கைகளை ஊக்குவித்து விவசாயிகளின் தேவைகளை இலகுபடுத்தும் வகையில், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்துக்கு செவ்வாய்கிழமை (19) வாகனம் ஒன்றை, கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வழங்கிவைத்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள மேற்படி அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹூஸைனிடம் குறித்த வாகனத்தை உத்தியோக பூர்வமாக கையளித்தார். 

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.சரூஜ், மற்றும் திணைக்களப் பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய வாகன கொள்வனவுக்காக இவ்வமைச்சு 4.4 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X