2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு முதல் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பாதயாத்திரை மேற்கொண்ட இந்து பக்தர்களின் சமாதான பாதயாத்திரை வியாழக்கிழமை(20) மட்டக்களப்பை வந்தடைந்தது.

கடந்த 18ஆம் திதகதி காரைதீவு முருகன் ஆலய முன்றலில் பாதயாத்தரை ஆரம்பமானது.

குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமையில் ஆரம்பமான  பாதயாத்தரை, கல்லாறு, குறுக்கள்மடம், புதுக்குடியிருப்பு வழியாக வியாழக்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தது.

எதிர்வரும் 26ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் எழுந்தருளியுள்ள வெருகலம்பதி சித்திரவேலாயுத ஆலயத்தை அடையவுள்ளதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் அமைதி சாந்தி ஏற்படவும் நிம்மதியாக மக்கள் வாழவும் பாதயாத்திரையின் இடையில் ஆலயங்களில் பூசை வழிபாடுளில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X