2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவன் கௌரவிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சர்வதேச பாடசாலைகளின் கணிப்பீட்டு பரீட்சையில் காத்தான்குடி யுனிக் சர்வதேச பாடசாலை மாணவன் ஏ.எஸ்.எம்.சிமாக் அகில இலங்கை ரீதியாக முதலாமிடத்தையும் ஆசிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் 10ஆவது இடத்தையும் பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்த மாணவனை கௌரவிக்கும் வைபவம் புதன்கிழமை (20) காத்தான்குடியிலுள்ள யுனிக் சர்வதேச பாடசாலையில் நடைபெற்றது.

யுனிக் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எச்.ஏ.ஆர்.மதனீ தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றமழான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவன் ஏ.எஸ்.எம்.சிமாக் உட்பட இப்பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய மூன்று மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள நியூ சௌத் வேல்ஸ் எனப்படும் பலக்லைக்கழகத்தினால் சர்வதேச பாடசாலைகளை உள்ளடக்கி ஐ.ஏ.எஸ்.எனப்படும் சர்வதேச பாடசாலைகளின் கணிப்பு பரீட்சையொன்றை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட இந்தப்பரீட்சையில்இருபது இலட்சம் மாணவர்கள் தோற்றினார்கள்.

இதில் கணிதப்பாடத்தில் மேற்படி மாணவன் ஏ.எஸ்.எம்.சிமாக் பரீட்சைக்கு தோற்றி அகில இலங்கை ரீதியாக முதலாமிடத்தையும், 16 நாடுகளை உள்ளடக்கிய ஆசிய நாடுகளுக்குள் 10ஆவது இடத்தiயும் பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுக் கொண்டார் என யுனிக் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எச்.ஏ.ஆர்.மதனீ தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X