2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கழிவு ஓடையை துப்புரவு செய்யும் பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்
 
 
பாசிகுடா கடற்கரை பகுதி, சுற்றுலா விடுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள கழிவு ஓடையை துப்புரவு செய்யும் பணிகள் புதன்கிழமை(20) மேற்கொள்ளப்பட்டன.

நீண்டகால கோரிக்கையின் பின்னர் இக்கழிவு ஓடை துப்புரவு செய்யப்படுவதாக சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

கல்குடா பொலிஸாரும் கோறளைப்பற்று பிரதேச சபையும் இணைந்து இச் சுத்திகரப்பு பணியை முன்னெடுத்ததாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜ.பி.தர்மிக்க நவரட்ண தெரிவித்தார்.

நீண்டகாலமாக இவ் ஓடை துப்புரவு செய்யப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகமாக  காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்குவதற்கு அச்சம் தெரிவிப்பதாகவும் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நல்லதொரு தீர்வை பெற்றுத்தருமாறு கல்குடா பொலிஸில், விடுதி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்ததாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி.தர்மிக்க நவரட்ண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கோரளைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்து சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவ் ஓடையில் தேங்கி நிற்கும் நீரை அவ்விடத்தில் இருந்து அகற்றி அருகில் உள்ள நீரேரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொணடு  வருவதாக பொலிஸ் அதிகாரி தொடர்ந்தும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X