2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி பாதிப்புக்களை குறைக்கும் நோக்கில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து உலக உணவுத்திட்டத்தினால் வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் நீர்நிலை மீன்பிடி, சாதாரண விவசாயம் ஆகியவற்றில் தங்கி வாழ்வோர் என்ற அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் அரிசி, பருப்பு, எண்ணை அடங்கலாக இரண்டு மாதங்களுக்கு நிவாரணங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில நிலவுகின்ற வரட்சி காரணமாக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதையடுத்து, உலக உணவுத்திட்டத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

அனர்த்த நிவாரண முகாமைத்துவ அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கேரிக்கைகையையடுத்து, வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்துக்கான 8 பவுசர்களில் ஒரு தொகுதி ரக்ரர் மற்றும் பவுசர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை அரசாங்க அதிபரால் போரதீவு பற்று - வெல்லாவெளி பிரதேச சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X