2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்திற்கான பொலிஸ் நடமாடும் சேவை நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்; வாழைச்சேனை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (23) நடத்தப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரி கே.யூ.திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில் பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.சமரதிலக, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் எச்.எம்.எம்.றியாழ், நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் வீ.அரசரத்தினம், மைலம்கரைச்சை போதிராஜ ராமய விகாரையின் விகாராதிபதி மஹிந்தா லங்கார தேரர், வாழைச்சேனை நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.றவூப், எம்.ஏ.எல்.இர்ஷாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கு பல் சிகிச்சை, சுகாதார திணைக்களத்தினால் இரத்தப் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, பிரதேச செயலகத்தினால் பிறப்பு, இறப்பு மற்றும் மரணப்பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன்; பொலிஸ் முறைப்பாட்டிற்கான பிரதிகளும் இதன் போது வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X