2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிய உறுப்பினர்கள் தெரிவு

George   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக் கிளைக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் மாவட்ட தலைமை காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (23) நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம் உட்பட மட்டக்களப்புத் தொகுதி தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு தொகுதிக் கிளைக்கான புதிய தலைவராக தங்கப்பிள்ளை கோபாலப்பிள்ளையும் செயலாளராக கதிர்காமத்தம்பி குருநாதன், பொருளாளராக தங்கராசா இன்பராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக சட்டத்தரணி பிரேம்நாத் உப செயலாளாரக பூபாலராஜா ஆகியோருடன் 14 பேர் கொண்ட நிர்வாக உறுப்பினர் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X