2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடியில் பொலிஸ் சார்ஜன்ட் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த கிரான்குளம் வாசியான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நேற்று புதன்கிழமை (10)  கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் சார்ஜன்ட் கந்தையா ஜெகதீஸ்வரன் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் 1989ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில்  இணைந்துகொள்வதற்கு முன்னர் பல வருடங்களாக எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் இணைந்திருந்தார் என்பதுடன், பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதான தகவலின் அடிப்படையில் இவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது மகனும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கப் போராளியாக இருந்து மரணமடைந்தார்; என்;ற தகவலின் பின்னணியிலும் விசாரணைகள்  முன்னெடுக்கப்படுவதாகவும்; பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X