2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கின் கல்வி கண்காட்சி

Super User   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.ஜே.எம்.ஹனீபா

உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி எதிர்வரும் சனி, ஞாயிறு (13,14) ஆகிய தினங்களில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஸம்ஸ் லங்கா ஹோல்டிங் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இவ் உயர் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி, மாணவர்கள் சிறந்த முறையில் உயர் கல்வியை கற்பதற்கு ஏற்ற கல்வி நிலையங்களை அறிமுகம் செய்து வைப்பதற்கும், சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற விரும்பும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இக்கண்காட்சி நடைபெறுவது மாணவர்களின் ஆக்கபூர்வமான கல்விப் பயணத்திற்கு சாதமாக அமையும் எனக் கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் இவ்வாறான கண்காட்சிகள் கொழும்பில் ஆண்டுதோறும் நடைபெற்றுவந்தன. தற்போது முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளது. இது கிழக்கு மாகாண மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

இக்கண்காட்சியில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் மூலம் ஒரே இடத்தில் சகல நிறுவனங்களையும் சந்தித்து மாணவர்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக அமையும். இதன்போது சில கல்வி நிறுவனங்களினது காட்சிப்பீடத்தில் பதிவினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள், டெப் மற்றும் விலைக்கழிவு என்பனவற்றை வழங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X