2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிரி. தூதுவராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் மட்டு. விஜயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்துக்கான விஜயத்தை வியாழக்கிழமை (11)  மேற்கொண்ட இலங்கையிலுள்ள பிரித்தானியா தூதுவராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி லவ்றா டேலியா, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு றிவைறா விடுதியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்   கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன்,  சி.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமாதான அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு, வடக்கில் இராணுவமயமாக்கல்,  திட்டமிட்ட குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பின்போது பிரதித் தூதுவர் திருமதி லவ்றா டேலியா மட்டக்களப்பின் தற்போதைய நிலைமை உட்பட  பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X