2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமியின் சடலம் நல்லடக்கம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் வியாழக்கிழமை இரவு (11) காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதன்கிழமை (10) மாலை துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியான, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் அப்துர் றஹ்மான் வீதியில் வசிக்கும் எஸ்.பாத்திமா சீமா எனும் சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து நேற்றுக்காலை பொலனறுவை போதனா வைத்தியசாலைக் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சட்ட வைத்திய நிபுணரினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமியின் சடலம் காத்தான்குடிக்கு கொண்டு வரப்பட்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்ட மீரா ஜும் ஆப் பள்ளிவாயல் மைய்யவாடியில் பொதுமக்கள் கண்ணீர் மல்க சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச்சிறுமியின் ஜனாசா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X