2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'அரசாங்கத்தின் திட்டங்களை அதிகாரிகள் அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்'

Kogilavani   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'அரசாங்கத்தின் திட்டங்களை அதிகாரிகள் அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்' என ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை(11) நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'அரசாங்கத்தின் திட்டங்களை அதிகாரிகள் அக்கறையுடன் அமுல்படுத்த வேண்டும். அதன்மூலம் மக்கள் நன்மையடைய முடியும்.
மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துவதுடன் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செய்யவேண்டும்.
 
இந்த செங்கலடி பிரதேச செயலகம் தேசிய உற்பத்தி திறனுக்கான விருதி பெற்றது மகிழச்சியளிக்கின்றது. அதற்காக செங்கலடி பிரதேச செயலாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், விசேட வேலைத்திட்டம், பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் ஊ.உதயசிறிதர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X