2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் குடி நீர் இணைப்புக்காக நிதியுதவிகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நுர்ர்தீன்


காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரின் ஏற்பாட்டின் கீழ் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில், புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 100 வறிய குடும்பங்களுக்கு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இணைப்பு பெறுவதற்கான நிதியுதவிகள் வெள்ளிக்கிழமை (12) வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இந்த வைபவம் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அதிதிகளால் புதிய காத்தான்குடி 167- சி கிராம சேவகர் பிரிவிலுள்ள 100 சமூர்த்தி பயனாளிகளுக்கு குடி நீர் இணைப்பு பெறுவதற்கான நிதியுதவிகள் கொடுக்கப்பட்டதுடன் 300 மாணவ மாணவிகளுக்கு குர் ஆன் மத்ரசாவும் 30 ஜூஸ் குர்ஆனும் வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுனத்தின் பணிப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக சவுதிஅரேபியா, மாலைதீவு, எமன், மலேசியா ஆகிய நாட்டின் பிரமுகர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X