2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுமி கொலை தொடர்பில் சந்தேகநபருக்கு மரபணு பரிசோதனை

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் கடந்த புதன்கிழமை (10) மாலை சிறுமியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை வெள்ளிக்கிழமை (12) சிறைச்சாலை அதிகாரிகள் மரபணு பரிசோதனைக்குட்படுத்தியதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த சந்தேக நபரை நீதிமன்ற உத்தரவின் படி அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று இந்த மரபணு பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்.ஐ.றமழான் என்ற சந்தேகநபர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள 9 வயதுடைய சிறுமியொருவரை புதன்கிழமை (10) துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலை செய்தார் என்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X