2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அலைபேசிகள் திருட்டு : இருவர் கைது

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் திருட்டுப்பட்ட ஒரு தொகை அலைபேசிகளுடன் சந்தேகநபர்கள் இருவரை வெள்ளிக்கிழமை(12) இரவு  கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியிலுள்ள அலைபேசி விற்பனை நிலையமொன்றிலிருந்து கடந்த 8ஆம் திகதி ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து விசாரணை செய்து வந்த ஏறாவூர் பொலிஸார், நேற்றிரவு ஏறாவூர் மக்காமடிப் பகுதியில் வைத்து, வீட்டின் பின்புறம் கோழிக் கூண்டுக்குக் கீழே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குறித்த அலைபேசிகளை மீட்டனர்.

அத்துடன், வீட்டிலிருந்து இனாமுல்லா ஹக் (வயது 19) என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேற்படி சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய அஸாம்(வயது 17) என்ற மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் ஏற்கெனவே, மன்னாரில் கடை உடைப்பு திருட்டுச் சம்பவத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏறாவூர் மக்காமடி வீதியில் கைது செய்யப்பட்ட இனாமுல்லா ஹக் என்ற நபர், ஏற்கெனவே கடை உடைத்துத் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் உட்பட 4 குற்றச் செயல்களைப் புரிந்தவர் என்றும் அவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹிரன் செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிராஜா புருஷோத்தமன், எம்.எல்.சமீத, பொலிஸ் சார்ஜன்ட் எம்.ஏ.சி.எம். தாஹிர், எஸ்.எச். ஜயந்த ஆகியோரடங்கிய குழுவினர் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X