2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் கொடிவராம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் கொடிவாரம்  எதிர்வரும் திங்கட்கிழமை 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கொடிவாரத்தின் முதல் கொடி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸிடம் வழங்கப்படவுள்ளது.

தரிசனத்தின் வளச்சியைக் கருத்தில் கொண்டு நிதி சேகரிப்பதற்காகவும், தரிசனம் பற்றிய விழிப்புணர்வை சமூக மட்டத்தில் ஏற்படுத்துவதற்காகவும் வருடாந்தம் இந்தக் கொடிவாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் இந்தக் கொடிவாரம் செயற்படுத்தப்படுகிறது.

1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி கற்ற 12பேர் பட்டதாரிகளாகி தற்போது அரச சேவைகளில் இணைந்துள்ளதுடன், 2பேர் நியமனங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.

மேலும் கிழக்கு, யாழ், பேராதனை பல்கலைக்கழகங்களில் 7பேர் பட்டப்படிப்புக்களைத் தொடர்கின்றனர். அதே நேரம், 2014ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 6 பேர் தோற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் தற்போது 21 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் கல்வி செயற்பாடுகள் தவிர்ந்து கலை கலாசார செயற்பாடுகளிலும் மாவட்ட, மாகாண, தேசிய அளவுகளில் திறமைகளையும் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையில் 12 வயதுக்குட்பட்ட விழிப்புலனற்ற பிள்ளைகளை இணைத்துகொள்ளப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுவதோடு பாரமரிக்கப்பட்டும் வருவதாக அதன் தலைவர் முருகு தயானந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X