2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.நூர்தீன்


பெண் முயற்சியான்மையாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் வியாபார சந்தை மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை(12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(14) நிறைவு பெறவுள்ளது.

இக் கண்காட்சியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராஜா உட்பட பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X