2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கு நிதியுதவி

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் 4 ஆம் குறிச்சியிலுள்ள மட்பாண்டத் தொழில் செய்யும் பெண்களுக்கு, தொழிலை விருத்தி செய்வதற்காக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் காளிகோயில் நெசவு நிலையக் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை(12) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் (Eravur Social Development Foundation)  ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்பாண்டத் தொழிலில் ஈடுபடும் 10 வறிய பெண்கள் கொண்ட குழுவொன்றிற்கு 114,000 ஆயிரம் ரூபாய் நிதி, மட்பாண்டத் தொழிலை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாக ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன் தெரிவித்தார்.

இப்பகுதியில் மட்பாண்டத் தொழிலில் ஈடுபடும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக மட்பாண்டத் தொழில் புரிவோர் குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்களான 5 குடும்பங்களுக்கு 5 மலசல கூடங்களும், 10 குடும்பங்களுக்கு 10 நிலத்தடி நீர்க் கிணறுகளும், மட்பாண்டத் தொழிலைச் செய்யக் கூடிய வசதிகளுடன் அமைந்த தனித்தனி 9 கட்டிடங்களை 9 குடும்பங்களுக்கு தலா 65 ஐயாயிரம் ரூபாய் செலவில் கட்டிக் கொடுத்துள்ளதாக ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.ஜெயந்தினி கூறினார்.

நேற்றைய நிதியளிப்பு நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.ஏ.சி.நஜிமுதீன், வெளிக்கள அலுவலர்களான எஸ்.ஜெயந்தினி, எம்.ரீ.எம்.பானு, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.மாலதி, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.காங்கேசன், காளிகோயில் நிருவாக துணைச் செயலாளர் எஸ்.சண்முகம் உள்ளிட்டடோரும் பயனாளிக் குடும்பங்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X