2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொங்ரீட் வீதிகள் அமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பில், கிராமத்துக்கொரு வேலைத்திட்டத்தின் கீழ் தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 08 கிராமங்களில் கொங்ரீட் வீதிகள் அமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்எருவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம், மகிளுர், குறுண்வெளி, பட்டிருப்பு, களுவாஞ்சிக்குடி, தேற்றாத்தீவு ஆகிய  கிராமங்களிலே மேற்படி வீதி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், காளி கோயில் வீதியை கொங்ரீட் வீதியாக மாற்றும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா, உதவி திட்டப் பணிப்பாளர் ச.சசிகுமார், சமூர்த்தி முகாமைப் பணிப்பாளர் எஸ்.வரதராஜன், கல்லாறு திவிகெகும வங்கி முகாமையாளர் தவேந்திரன், பெரியகல்லாறு கிராம உத்தியோகத்தர்களான எஸ்.ஞானசிறி, இராதாகிருஸ்ணன், குலதுங்கன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாதர் சங்க அங்கத்தவர்கள், பொதமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X