2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி சிரமதானப் பணி

Thipaan   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்  


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலுள்ள  பொது இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை (12) சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இச்சிரமதானப் பணியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கொக்கட்டிச்சோலை பொலிஸார், இராணுவத்தினர் என பலரும் இணைந்திருந்தனர். 

நாடளாவிய ரிதியில் பிரகடனப்படுத்தியுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளாகிய நேற்று (12) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்க கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X