2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அலைபேசிகள், கணினி திருட்டு; இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 5ஆம் குறிச்சி பஸார் பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றிலிருந்து திருட்டுப்போன 25 அலைபேசிகளையும் மடிக்கணினி ஒன்றையும்  கைப்பற்றியதுடன்,  சந்தேகத்தின் அடிப்படையில்  இளைஞர்கள் இருவரை  சனிக்கிழமை (13) இரவு கைதுசெய்ததாக  ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.

இந்த விற்பனை நிலையத்திலிருந்து கடந்த 8ஆம் திகதி 119,400 ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மற்றும் மடிக்கணினி   திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தாம் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சந்தேக நபர்கள்  இருவரும் ஏற்கெனவே போதைப்பொருள் விவகாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரமவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹிரன் செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் கான்ஸ்டபிள் ஆர்.புருஷோத்தமன், எச்.எம்.எல்.அபேசிங்ஹ, பொலிஸ் சார்ஜன்ட் எம்.நஜிமுதீன், ஈ.எல்.பதூர்தீன், கே.எம்.றபீக், ஆர்.எம்.பண்டிதரெட்ன, எச்.பி;.ஜயந்த, ஜி.தர்மசேன ஆகியோர் அடங்கிய குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X