2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'பூநொச்சிமுனை சின்னத்தோனா' நீரோடை விஸ்தரிப்பு தொடர்பான முறுகல் நிலை தீர்த்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மஞ்சந்தொடுவாய் கிராமத்திலுள்ள  'பூநொச்சிமுனை சின்னத்தோனா' நீரோடையை விஸ்தரிப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலை தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இந்த நீரோடையை   நேற்று சனிக்கிழமை (13) சென்று பார்வையிட்ட  சிவநேசத்துரை சந்திரகாந்தன், முறுகல் நிலையை தீர்வுக்கு கொண்டுவந்தார்.

மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், மட்டக்களப்பு நகரிலுள்ள பல குடும்பங்கள் இடம்பெயரும் நிலைமையும் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் நிலைமையும் காணப்பட்டுவந்தன.

இதனைத் தடுக்கும் நோக்கில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வடிகான்களை துப்பரவு செய்தல் மற்றும் இயற்கை நீரோடைகளை அகலப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், மண்முனை வடக்கின் நகரப் பகுதிகளில் நீரோடைகளை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மண்முனை வடக்கு காத்தான்குடி எல்லைப்பகுதியிலுள்ள  'பூநொச்சிமுனை சின்னத்தோனா' நீரோடையை கரையோர வளங்கள் பாதுகாப்புத் திணைக்களமும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து அடையாளப்படுத்தும் பணியை மேற்கொண்ட வேளையில், மஞ்சந்தொடுவாய் -காத்தான்குடி எல்லைப் பிரதேச மக்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இதையடுத்து தொடர்ந்து அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில்,  அங்கு விஜயம் செய்த முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இந்த முறுகல் நிலையை தீர்த்துவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X