2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றுகூடும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்
,எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறைக்கைதிகள் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைக்கைதிகள் தங்களது குடும்பத்தினருடன்  ஒன்றுகூடும் நிகழ்வு அச்சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14)  நடைபெற்றது.

சிறைச்சாலைத் திணைக்களமும் மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.பி.பிரியங்கர தலைமையில் நடைபெற்றது.

அதிக நாட்களாக சிறையிலுள்ள கைதிகளில்  தெரிவுசெய்யப்பட்ட  கைதிகளினுடைய  16  பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்,   பூப்பந்துப் போட்டியில் வெற்றியீட்டிய கைதிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

கைதிகள் நலன்புரிச்சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி கே.கருணாகரன், உபதலைவர் எஸ்.சதாசிவம், செயலாளர் வி.தர்சன், புனர்வாழ்வு உத்தியோகஸ்தர் எல்.ஜெயசுதன், சங்க அங்கத்தவர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 445 ஆண்களும் 20 பெண்களும்  1 இலிருந்து 3 வயதுவரையான  02 குழந்தைகளும் உள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X