2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போலி இலக்கமிட்ட ஆட்டோ கைப்பற்றப்பட்டது; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவுப் பிரதேசத்தில் போலி இலக்கமிட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை நேற்று சனிக்கிழமை (13) கைப்பற்றியதுடன், இம்முச்சக்கரவண்டியை மறைத்துவைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை கைதுசெய்ததாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

மறைத்துவைக்கப்பட்டிருந்த டபிள்யூ.பி. கியூ.ஐ. 4309 எனும் போலி இலக்கமுடைய முச்சக்கரவண்டியை கைப்பற்றிய  அதேவேளை,  இந்த இலக்கத்துக்குச் சொந்தமான  உண்மையான முச்சக்கரவண்டியையும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சாய்ந்தமருது எம்.பாஹீர் என்பவருக்கு சொந்தமான டபிள்யூ.பி. கியூ.ஐ. 4309 எனும் இலக்கமுடைய உண்மையான முச்சக்கரவண்டி அவரால் பாவிக்கப்பட்டுவந்தது. இந்த  நிலையில், இதே இலக்கமிடப்பட்ட  முச்சக்கரவண்டியொன்றை மகிழடித்தீவுப் பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

விடுதலைப்புலிகள்  கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலிருந்த காலத்தில் இந்த போலி இலக்கமிட்டு இந்த முச்சக்கரவண்டியை பாவித்து வந்தமை தெரியவந்துள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.

மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் இதன் உண்மையான இலக்கமுடைய முச்சக்கரவண்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்கவின் ஆலோசனையுடன் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.டபிள்யூ.சானக்க டி சில்வாவின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் பிரிவினர் இந்த முச்சக்கரவண்டியை கைப்பற்றியுள்ளனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X