2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோவிலில் கொள்ளை: பொலிஸாரின் விசாரணை ஆரம்பம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கிராண்குளம் புதுக்குடியிருப்பு எல்லையிலுள்ள ஜயனார் கோவிலில் வெள்ளிக்கிழமை (12) இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இக்கோவிலில் இருந்து வெள்ளிக்கிழமை (12) இரவு பெறுமதியான குத்துவிளக்குகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்தடி மற்றும் ஆறடி உயரங்களில் இருந்த பித்தாளையினாலாக்கப்பட்ட குத்து விளக்குகள் மற்றும் பெறுமதியான சங்கு என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து கோவில் நிருவாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X