2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திலகவதியார் மகளிர் இல்லத்துக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகத்தினரால் பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லத்துக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகத்தலைவர் அ. கந்தவேள் தலைமையில் இல்ல மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14)  நடைபெற்றது.

இதன் போது கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை லயன்ஸ் கழககத்தின் ஆளுனர் சபை உறுப்பினர் த. நல்லையா பொருளாளர் ஆனந்தராஜா மற்றும் ந. கருணானந்தராசா ந. குகராசா ந. பிரகலாதன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

42,500 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மேற்படி இல்லத்திலிருந்து கல்வி கற்கும் 35 மணவர்களுக்கு வழங்கப்பட்டன.

களுவாஞ்சிகுடியை சேர்ந்த காலஞ் சென்ற வில்லியம்பிள்ளை நவரத்தினம்பிள்ளை ஆசிரியரின் ஞாபகார்த்தமாக அன்னாரின் பிள்ளைகளின் அனுசரணையில் இவ்வுதவி மேற்கொள்ளப்பட்டதாக  களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகத்தலைவர் அ. கந்தவேள் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X