2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பஹ்மியா அரபுக்கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவி

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
,வடிவேல்-சக்திவேல்

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட், மல்வத்தை பதுளைப்பிட்டியில் அமைந்துள்ள பஹ்மியா அரபுக்கல்லூரி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக தனது சொந்த நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயை ஞாயிற்றுக்கிழமை (14) வழங்கினார்.

அப்பிரதேசத்தின் சமூக நலன்விரும்பிகளின் வேண்டுகோளுக்கிணங்க பதுளைப்பிட்டியில் பஹ்மியா அரபுக் கல்லூரிக்கு அமைச்சர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு கல்வி பயிலும் அம்மாணவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்த பின்னர் உடனடியாக ஒரு இலட்சம் ரூபாய் பணத்தொகையைக் கையளித்தார்.

இங்கு மார்க்கக் கல்வி பயிலும் 85க்கு மேற்பட்ட மாணவர்கள் தாம் பல்வேறு இடங்களில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் தமது தங்குமிடத்தில் காணப்படும் அடிப்படை வசதியீனங்களை அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.

இந்நிகழ்வின் போது சமூக நலன் விரும்பி ஜே. அஸீம்தீன், பஹ்மியா அறபிக் கல்லூரி அதிபர் மௌலவி எச்.எம்.எம். ஹிதாயத்துல்லாஹ் உட்பட இன்னும் பல மௌலவிமாரும் உடனிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X