2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த  சாரதி உட்பட 04  பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த  நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (15) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் கோவிலிலிருந்து  மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த  முச்சக்கரவண்டியொன்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்களில் 03 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து  தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X