2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல்

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணம் தழுவியதான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஒன்றினை காத்தான்குடி மீடியா போரம் நடாத்தவுள்ளதாக மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதோடு மூத்த ஊடகவியலாளர்கள் இளம் ஊடகவியலாளர்களுக்கு தமது கடந்தகால ஊடகத்துறை தொடர்பான அனுபவங்களை இதன்போது பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதுடன், ஊடகவியலாளர்கள் மத்தியில் காணப்படும் கலை, கலாசார, பண்பாடுகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன.

ஒக்டோபர் 7ம் திகதி இரவு காத்தான்குடி கடற்கரையில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெறவுள்ள இவ் ஒன்றுகூடலில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X