2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் நகரசபைக்கு குடிநீர் பவுசர்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபைக்கு இடர் முகாமைத்துவ அமைச்சால் 3,500 லீற்றர் கொள்ளளவுள்ள குடிநீர் பவுசர் ஒன்று திங்கட்கிழமை (15)  வழங்கப்பட்டுள்ளதாக நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, ஏறாவூர் நகரசபைக்கு இந்த பவுசரை அமைச்சர் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

வறட்சி நிலவும் தற்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கு  இந்த பவுசர் பயன்படுமெனவும் அவர் கூறினார்.

ஏறாவூர் நகரசபை முன்றலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லீம், உறுப்பினர்களான எம்.எல்.அப்துல் லத்தீப், ஐ.அப்துல் வாஸித் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X